முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured post

புகைப்பட பக்கம்: கருமேகங்களுடன் சூரியன்

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்ததன் காரணமே என் Google photos இல் தேங்கி கிடக்கும் பல புகைப்படங்களை பதிவேற்றலாம் என்பதே. புகைப்படங்கள் வெறுமனே படங்கள் மாத்திரமல்ல, அை வண்ணங்களை மட்டுமல்ல நினைவுகளையும் அவை சேமித்திருக்கின்றன. போகும் இடமெல்லாம் பூக்கள், செடிகொடிகள், அருவிகள், மலைகள், மழலைகள், நீலவானம், கடல், பொங்கி வரும் அலைகள் என காற்றை தவிர கண்களை கவரும்படியாக எதனை பார்த்தாலும் படம் பிடித்து விடுவேன். அத்தனை படங்களும் Google cloud இல் சேர்ந்து விடுகிறது, முகநூல் Instagram இலும் பகிர்ந்து கொள்ளுவதில்லை, அதனால்தான் இந்த முயற்சி.  இந்த பூமியில் நான் கடந்து செல்லும் பொழுதுகளில் சூரியஸ்தமனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில வினாடிகளே நீடிக்கும் அந்த அற்புத கணப்பொழுதுகளை காணும் போதெல்லாம் படம் பிடித்து வைத்துவிடுவேன். பகல் எல்லாம் சுட்டெரிக்கும் சூரியனை தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பதும், விதம் விதமாக புகைப்படம் எடுப்பதும் ஒரு தனி சுகம். இந்த புகைப்படங்கள் கொழும்பு வெள்ளவத்தை Marine drive கடற்கரையில் நான் உலாத்தும் போது எடுக்கப்பட்டவை.

சமீபத்திய இடுகைகள்

பயணங்கள் : கொழும்பு - யாழ்ப்பாணம் #Breakdown stories

ஆண்ரோய்ட் 12 : Material You என் அனுபவம்

Ed Sheeran ஐ மறந்து விட்ட தமிழர்கள்!

கண்டபடி கவலைப்படாதே

இசை என்னும் இனிய போதை