Ed Sheeran ஐ மறந்து விட்ட தமிழர்கள்!
சில பாடல்கள் எப்படி இனம், மதம், மொழி என எல்லைகளால் அடித்து பிடித்து பிரிந்து கிடக்கும் மனிதர்களை ஒன்றாக சேர்த்து விடுகிறது என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. அப்படித்தான் தமிழர்கள் மத்தியில் Shape of You பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான Ed Sheeran ஐ தமிழர்கள் அதன் பிறகு கண்டு கொள்ளவே இல்லை. இப்போதெல்லாம் நல்ல தமிழ் பாடல்கள் வேறு எப்போதாவது இருந்து விட்டு தான் வருகிறது. அப்படி இருந்தும் நல்ல ஆங்கில பாடல்கள் தமிழர்களின் சமூகவலைத்தளங்களில் பிரபலமாவதே இல்லை. LilNasX இன் Old town road ஐ உலகமே ரசித்து மகிழ்ந்த போதும், அந்த பாடல் தமிழர்களின் மனதை தொட்டிருக்கவில்லை.
Shape of you பாடல்தான் எனக்கும் Ed Sheeran ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதன் பிறகு, Ed Sheeran இன் ballad வகையான பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. Perfect,Photograph, thinking out loud, After hours பாடல்கள் எல்லாம் நான் ரிப்பிட்டில், லூப்பில் வைத்து அலுக்கும் அளவுக்கு ரசித்தவை. இவற்றை பற்றி எல்லாம் எழுத எனக்கு போதிய இசை அறிவோ மொழி அறிவோ இல்லை என்பது போக, ஆனால் ஏன் இப்படியான தமிழ் ballad பாடல்கள் வருவதில்லை என்பதுதான் எனக்கு புரியாத ஒன்று.Ed Sheeran இன் இந்த ballad பாடல்கள் காதலை மிகவும் ஆழமாக, ஆனால் மிகவும் சாதாரணமான வார்த்தைகளில், மென்மையான கிறங்கவைக்கும் இசையுடன், விவரிக்கின்றன. Ed Sheeran இன் crispy ஆன குரல் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான உணர்வை தருகிறது. உண்மையாக காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பாடல்கள் ஒருவிதமான நெகிழ்வான உணர்வை நிச்சயமாக தரும்.
சரி, நான் இதை எழுத தொடங்கியதற்கு காரணம் இந்த பாடல்கள் அல்ல, இந்த இசைக்கு என்றே ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி வைத்திருக்கும் ரசிகர்கள் தான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் independent music எங்கோ போய்க்கொண்டிருக்கிறது ஒரு பாடல் வெளியாகினால் எத்தனை promotion interviews எத்தனை வகையான live performance. அப்படித்தான் Ed Sheeran இன் எதிர் வரும் album = இல் வரவிருக்கும் bad habbits மற்றும் shivers பாடல்களின் MTv VMA awards live performance videos களை பார்த்து வாயடைத்து போய்விட்டேன். பாடல்கள் சராசரி தான் என்றாலும், அரங்க வடிவமைப்பும், lightning ம் அட்டகாசம். இந்த ஒளியமைப்புக்காகவே பல தடவைகள் இப்பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கிறேன்.
Bad habbits பாடலின் 3.14 இல் கிட்டார் இசையுடன் மட்டும் பாடிக் கொண்டிருக்கும் Ed Sheeran,
"Swearin' this will be the last, but it probably won't, I got nothin' left to lose.... என்ற இடத்தில் வரும்போது beats உடன் இணைந்து அத்தனை lights உம் blast ..
It's the goosebumps moment...
கருத்துகள்
கருத்துரையிடுக