இசை என்னும் இனிய போதை
போதை என்பது மனிதனுக்கு தேவையானது என்று நான் நினைக்கிறேன். பிறக்கும்போது தாய்ப்பால் மீது மட்டும் இருக்கும் போதை மனிதன் வளர வளர...வேறு ஏதாவது ஒன்றை பற்றிக்கொண்டு விடுகிறது... Dopamine நியூரோன்கள் தரும் ஏதோ ஒரு போதையில் தான் எல்லோரும் இயங்கி கொண்டிருக்கிறோம்... இல்லாவிடில் கடமைக்கு வாழ்ந்து செத்து போக யாருக்கு விருப்பம் சொல்லுங்கள்
ஆனால் என்ன, போதையே வாழ்க்கையாகி அதற்கு அடிமையாகிவிட்டால் அழிந்து போய்விடுகிறோம் அவ்வளவுதான்.
நாம் நினைக்கிறோம் மது, மாது, புகைப்பிடித்தல் மற்றும் போதை மருந்துகள் மட்டும் தான் மனிதனுக்கு போதை தருகிறது என்று... அப்படி இல்லை, சிலருக்கு கற்றல் ஒரு போதை, சிலருக்கு உலகம் முழுக்க சுற்றுவது போதை தருகிறது.. பணம் சம்பாதிப்பது ஒரு விதமான போதை... என்னைப்போல் சிலருக்கு பணத்தை செலவழிப்பது ஒரு போதை (Shopping)...சிலருக்கு வயிறு முட்ட சாப்பிடுவது, எதையும் கொறித்து கொண்டே இருப்பது (எனக்கும்தான்...) தனி போதை தருகிறது...
இந்த நவீன யுகத்தில் நம்மை பிடித்து கொண்ட புதிய போதைதான் சமூக வலைத்தளங்கள். Likes culture எனப்படும் இந்த போதை likes, comments, subscribers கணக்குகள் கொடுக்கும் dopamine க்காக என்னவெல்லாமோ செய்ய வைத்து ஊரில் பல மனநோயாளிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
எங்கள் செல்லிடப்பேசிகளை சுரண்டி கொண்டிருப்பதும் ஒரு போதை தான்(screen adiction) இதை குறிவைத்து தான் சமூக வலைத்தளங்கள் முடிவில்லாத உருட்டலை (infinite scrolling) தங்கள் செயலிகளில் வைத்திருக்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்களின் Algorithms எப்படியாவது மக்கள் தங்கள் செயலிகளை உருட்டிகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கபடுகின்றன. இதில் டிக் டொக் இப்பொழுது முன்னணியில் இருக்கிறது. அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின் படி அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் ஒருவர் சராசரியாக செலவிடும் நேரத்தில் Tik Tok, Youtube ஐ மிஞ்சி இருக்கிறது. (In US TikTok 26hrs/month and you tube 24hrs/month, In UK TikTok 26hrs/week and YouTube 16hrs/week).
இதனை தவிர்ப்பதற்காக தான் Apple மற்றும் Android இயங்கு தளங்கள் தமது பயனாளர்களின் நன்மை கருதி digital well being என்பதை தமது இயங்கு தளங்களில் கொண்டு வந்திருக்கின்றன. இதன்மூலம் ஓரளவுக்கு உங்களுடைய screen time, App time மற்றும் தூங்கும் நேரங்களை ஓரளவுக்காவது ஒழுங்குபடுத்தி கொள்ள முடியும்.
சரி, தலைப்புக்கு வருகிறேன், எந்த கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் அவனது கலை/படைப்பு ஒரு போதை இல்லையா ?
அதுபோல, ரசிகர்களுக்கு கலையை ரசிப்பது ஒரு போதை.
ஆக போதை என்பது மனிதனுக்கு, ஏன் ஒவ்வொரு உயிரினத்துக்குமான தேவை.
எங்கள் புலன்கள் கொடுக்கும் போதை போதாதா என்ன?
கண்கள் கொண்டு இயற்கையின் வண்ணஙகளை ரசியுங்கள், உங்கள் காதுகள் கொண்டு இயற்கையின் சப்தங்களை ரசியுங்கள்! மழை பெய்யும் ஓசையில் இசை இல்லையா! சின்னஞ்சிறு அலைகள் கரைகளில் தாளம் போடுவது இசை இல்லையா?
இசையை ரசிப்பது தான் என் இனிய போதை.
இசை ஒவ்வொரு முறையும் என்னுள்ளே புத்தம் புதிய நியூரோன்களை உயிர்பிக்கிறது. நல்ல பாடல்கள் கேட்கும்போது மயிர்கூச்செறிகிறது, இசை தரும் போதை தான் என்னை இயக்குகிறது.
மது அருந்தினால் மயக்கம் தான் வருகிறது. செல்லிடப்பேசியை உருட்டி கொண்டிருந்தால் தூக்கம் தொலைந்து விடுகிறது, அப்படியே பைத்தியம் பிடித்து விடுகிறது.
சரி, இதை படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றாலே நீங்களும் என் ரகம் தான்.
Screen ஐ சுரண்டுவதை நிறுத்தி விட்டு கண்களை மூடி உங்களுக்கு பிடித்த பாடல் ஒன்றை கேளுங்கள், அந்த பாடலின் இடையிinterlude கிறங்கி போவீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக