ஆண்ரோய்ட் 12 : Material You என் அனுபவம்

நான் ஒரு ஆண்ரொய்ட் பையன்! ஏன் கூகிள் குழந்தை என்று கூட கூறலாம். ஒவ்வொரு முறையும் கூகிள் புதிய ஆண்ரொய்ட் பதிப்பை வெளியிடும்போது நான் தவமாய் தவம் இருக்கவேண்டி இருந்தது, எப்போது எனது மொபைலுக்கு புதிய ஆண்ரொய்ட் வரும் என்று?. ஆப்பிள் நிறுவனம் புதிய IOS வெளியிடும்போது அத்தனை Iphone களும் டாண் என அப்டேட் ஆகிவிடும்.  ஆனால் ஆண்ரொய்ட் போன்களின் நிலைமையோ வேறு, கடவுள் கண்திறந்திருந்தாலும் பூசாரி கதவை திறக்காத குறையாக, கூகிள் புதிய ஆண்ரொய்ட் பதிப்பை வெளியிட்டாலும் மொபைல் நிறுவனங்கள் அந்த ஆண்ரொய்ட் அப்டேட்டை உடனடியாக தருவதில்லை. இந்த Android fragmentation, Google நிறுவனத்திற்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்து வந்தது, எனக்கும்தான். 

ஒவ்வொரு வருடமும் எனது மொபைலுக்கு புதிய ஆண்ரொய்டை எப்படி விரைவாக அப்டேற்றி கொள்ளலாம் என்று நான் செய்த அலப்பறைகள் ஏராளம். Samsung Galaxy வைத்திருந்த நான், கூகிள்  Android one திட்டத்தை கொண்டுவந்த போது, Xiomi M series இற்கு தாவினேன். Xiomi M1,M2 என காலம் ஓடியது... ம்ஹும்... எந்த முன்னேற்றமும் இல்லை. அதன் பிறகு கூகிள்  Android one திட்டத்தையே நிறுத்திவிட்டு சொந்தமாக Pixel phones ஐ வெளியிட தொடங்கியது, எங்கள் நாட்டில் அந்த விலை கொடுத்து Pixel phones வாங்குவதா?  சரி one plus இன் Oxygen OS ஏ பரவாயில்லை என்று OnePlus  6T உடன் மூன்று வருடம் குப்பை கொட்டினேன். குறை சொல்ல முடியாது என்றாலும் அந்த அப்டேட் பிரச்சனைக்கு முடிவில்லை. இறுதியாக அந்த OnePlus 6T உம் உடைந்து விட... 
Yes I bought a Pixel phone 4a 5G..

கடைசியாக அப்பழுக்கற்ற ஆண்ரோய்ட் உடன் என் கையில் Pixel phone. Midrange  என்றெல்லாம் இல்லை  எனது பாவனைக்கு இது போதும் என்றுதான் சொல்லுவேன். ஆனாலும் நான் ஒரு புகைப்பட புயல்... 😋 என்பதால் Snapdragon 765 image processing இல் கொஞ்சம் நொண்டி அடிக்கிறது அதுதான் கவலை... ஆனால்  சுத்தமான பட்டு போன்ற ஆண்ரோய்ட் அட்டகாசம்! அப்படியே ஆண்ரோய்ட் 11இல் ஒரு மாதம் ஓட்டி விட்டு ஆண்ட்ரோய்ட் 12 beta program இலும் நுழைந்து இப்பொழுது இறுதிப் பதிப்பும் வந்தாகிவிட்டது. 

எப்படி இருக்கிறது Android 12 & Material you



ஆண்ரொய்ட் 12 இன் சிறப்பம்சமே இதுதான். ஆண்ரொய்ட் இன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அழகியல் புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.  phone screen ஐ உங்கள் தனித்தன்மைக்கு ஏற்றவாறு வடிவமைத்து கொள்ள முடியும். Iphone இல் எனக்கு பிடிக்காத விடயமே, அதில் customization என்ற கதைக்கே இடமில்லை. எல்லோருடைய iphone home screen ம் கறுமம்  ஒரேமாதிரியாகவே இருக்கும். இப்போதுதான் IOS 14 உடன் Widgets மற்றும் home screen customization ஐ அறிமுகப்படுத்தி இருந்தது ஆப்பிள், இந்த மாற்றம் iphone பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மாற்றம் கூகிளிற்கு  ஆண்ரொய்டில் கட்டாயம் ஏதாவது புதிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது, விளைவு Material you.

  

Material you theme நீங்கள் தெரிவு செய்யும் Wallpapers களிற்கு  ஏற்றவாறு icons, quick settings, மற்றும் Widgets இன் வண்ணங்களை மாற்றி கொள்கிறது. Quick setting buttons வேறு  இப்போது நீள்சதுரமாக்கப்பட்டிருப்பது அழகாய் மட்டுமல்லாமல் கைகளுக்கு இலகுவாகவும் இருக்கின்றன. 
ஆண்ரொய்ட் 12 இன் புதிய Widgets கள் தான் எனக்கு மிகவும் பிடித்து போனது, அதிலும் clock, மற்றும் weather Widgets கள் அட்டகாசம், ஆண்ரொய்ட் home screen இற்கு புதிய ஒரு தோற்றத்தை தருகின்றன.



இது மட்டுமல்லாது material you design இன் சின்னஞ்சிறு மாற்றங்கள் Gboard, Dialer என ஒவ்வொரு Apps இலும் அழகோ அழகு. 
இவற்றுடன் சேர்ந்து ஆண்ரோய்ட் 12 இன்  silky smooth animations கள் pixel 4a  போன்ற mid range மொபைல்களிலும் உயர்தரமான அனுபவத்தை கொடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 Material you வை தவிர்த்து universal search, one hand mode, live caption, live transcribes, என Google AI இயந்திரத்தின் புண்ணியத்தில் பல புதிய  அம்சங்கள் இருந்தாலும் materia you Design ஆண்ரொய்ட் இயங்கு தளத்திற்கு கொடுக்கும் அழகு, கூகிளிற்கு பல வாடிக்கையாளர்களை pixel phones பக்கம் திரும்ப வைக்கும் என்பது மட்டும் நிச்சயம். இதற்காகவே கூகிளும் புதிய Pixel 6 phone ஐ வெறும் 599$ இற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஆண்ரொய்ட் 12 கூகிளிற்கு ஒரு புதிய பாதையை திறந்து விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்